BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 மே, 2009 - பிரசுர நேரம் 11:36 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
பிரபாகரன் உயிரிழப்பு: புலிகள் ஒப்புதல்
 
செல்வராசா பத்மநாதன்
செல்வராசா பத்மநாதன்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கையொப்பமிட்டுள்ள அறிக்கை இது.

பிபிசி தமிழோசைக்கு இவர் வழங்கிய ஓர் செவ்வியில், மே பதினேழாம் தேதி பிரபாகரன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார் என்றாலும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிகளில் இனி விடுதலைப் புலிகள் போராடுவார்கள் என்றும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள