BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 மே, 2009 - பிரசுர நேரம் 17:22 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
பிரபாகரன்: இதுவரை...
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ள நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை திரும்பிப் பார்க்கும் ஓர் கண்ணோட்டம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை தமிழர் பிரச்சினையில் பெரும் ஆளுமை செலுத்திய கெரில்லா இயக்கத் தலைவர். அவருடைய பெயரும், அதன் ஆளுமையும், இலங்கை சமூகத்திலும், இலங்கை தமிழர்கள் மத்தியிலும் அவர் குறித்து நிலவும் நேர் எதிரான முரண்பட்ட உணர்வலைகளையே தோற்றுவித்து வந்திருக்கிறது.

அவருடைய ஆதரவாளர்களின் பார்வையில், அவர் ஒரு மாவீரர். விடுதலைப்போராளி. சிங்கள அடக்குமுறைக்கு எதிராக தமிழர் களின் விடுதலைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் உறுதியுடன் நின்று இறுதிவரை போராடியவர்.

ஆனால் அவரது எதிரிகளின் பார்வையில், அவர் ஒரு தற்புகழ்ச் சிக்கிறுக்கு தலைக்கேறிய, மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் கொடூரமான கொலைகாரன்.

அவரது மறைவுக்குப்பிறகும் நீடிக்கக்கூடிய இந்த முரண்பட்ட மதிப்பீடுகளுக்கு மத்தியில், இருதரப்பாரும் ஒருவிடயத்தில் உடன்படுகிறார்கள். அதாவது, இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் பிரபாகரனின் ஆளுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இருதரப்பாருமே ஒப்புக் கொள்கிறார்கள்.

அவர் குறித்த பெட்டகத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள