|
அகதிகள் வெளியேற்றத்தில் அமெரிக்கா?
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கையில் போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்கப் படையினர் ஈடுபடுத்தப்படலாம் என்று கூறப்படுவது
தொடர்பில் தமிழோசையில் இடம்பெற்ற செவ்விகள்.
06/03/09 இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே நடக்கும் போரில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை போர்ப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்துவதில் அமெரிக்காவின் பசிபிக் கட்டளைப் படைப்பிரிவு ஈடுபடும் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய அமெரிக்க அரசுத்துறை அதிகாரி ரிச்சர்ட் பௌச்சர், இதன் சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா ஆராய்ந்ததாக தெரிவித்திருந்தார்.
09/03/09 இந்த திட்டம் குறித்து வாஷிங்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் அவர்களிடமும் அமெரிக்கா விவாதிக்கலாம் என்று சில செய்திகள் கூறுகின்றன. தனது தென் எல்லையில் இருக்கும் இலங்கையில் இது போன்ற ஒரு மூன்றாவது வெளிநாட்டு சக்தி ஈடுபடுவதை இந்தியா எப்படிப்பார்க்கும் என்பது தொடர்பில் இந்தியாவின் கேபினட் அமைச்சகத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியும் பாதுகாப்பு பகுப்பாய்வாளருமான பி.ராமன் தமிழோசையில் அலசினார்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||