|
காந்தி பொருட்கள் ஏலம்: சர்ச்சை
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியத் தலைவர் மஹாத்மா காந்தி பயன்படுத்திய சில பொருட்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது தொடர்பிலான சர்ச்சை குறித்து தமிழோசை
வழங்கிய செய்திகள் செவ்விகள்.
06/03/2009 இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர் மாஹாத்மா காந்தி பயன்படுத்திய அவரது சில உடைமைகள் அமெரிக்காவில் பெரும் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் இடையில் 18 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது. இந்த ஏலத்தை கடைசி நேரத்தில் நிறுத்த அதன் விற்பனையாளர் முயன்றிருந்தார். ஆனாலும் ஏலம் திட்டமிட்டபடி நடந்தது. காந்தியின் பொருட்களை வாங்கியிருப்பவர் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தப் பொருட்களை மீண்டும் இந்தியா கொண்டுவர இவர் திட்டமிட்டுள்ளார்.
மாஹாத்மா காந்தியின் உடைமைகளை ஏலத்தில் எடுத்த இந்திய தொழில் அதிபர் மற்றும் இந்திய அரசின் கருத்துகள்.
05/03/2009 மகாத்மா காந்தியின் தனிப்பட்ட உடமைகள் சிலவற்றை வைத்திருக்கும் அமெரிக்க ஏல நிறுவனம் இன்று அந்தப்பொருட்களை ஏலத்தில் விடுவதை நிறுத்த இந்திய அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. காந்தியின் அவ்வுடமைகளை வைத்திருக்கக்கூடிய ஜேம்ஸ் ஓடிஸ், ஏலம் நிறுத்தப்பட வேண்டுமானால், இந்திய அரசு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கென ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார். அவரது நிபந்தனைகளை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் ஏலம் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியா காந்தியடிகளின் கொள்கையைப் பின்பற்றாமல் அவரது நினைவுக்கு மட்டும் உரிமை கோருகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு இத்தருணத்தில் எழுந்துள்ளது. மஹாத்மா காந்தி அவர்களை தேசப்பிதா என்று வர்ணித்து தேசத்தின் மதிப்புகுரிய தலைவராக அவரை முன்னிருத்தும் இந்தியா, அவரது கொள்கைளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை விற்பனையாளரான ஜேம்ஸ் ஓட்டிஸின் நிபந்தனகள் மறைமுகமாக குறிப்புணர்த்துகின்றன என்று கூறப்படுவது குறித்து மதுரையில் அஹிம்சை மற்றும் அமைதிக்கான சர்வதேச காந்தியக் கழகம் என்ற அமைப்பின் இய்க்குநராக இருக்கும் டாக்டர் எஸ்.ஜெயப்பிரகாசம் தமிழோசையில் கருத்துவெளியிட்டார்.
வறுமை ஒழிப்பு மற்றும் வறியவர்களின் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகளுக்கு இந்தியா போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்ம இருக்கிறது என்பது பற்றி சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தின் பேராசிரியர் ஜனகராஜன் தமிழோசையிடம் பேசினார்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||