17 பிப்ரவரி, 2009 - பிரசுர நேரம் 11:33 ஜிஎம்டி
பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை வடிவமைத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின் பிறந்த 200வது ஆண்டு நிறைவை உலகெங்கும் உள்ள பரிணாம வளர்ச்சியியல் விஞ்ஞானிகள் கொண்டாடிவருகிறார்கள்.
மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' அதாவது survival of the fittest போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்த அவர்.
தனது முடிவுகளை இரு பெரும் நூல்களாக அவர் வெளியிட்டார்.
இவரது இந்த பரிணாம வளர்ச்சித்தத்துவங்களின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சூழலியல்துறைப் பேராசிரியர் பார்த்தசாரதி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியினை நேயர்கள் கேட்கலாம்.