|
மும்பை பயங்கரம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
195 பேர்வரை கொல்லப்பட்டும் 370 பேர்வரை காயமடைந்தும் இருக்கின்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்பாக தமிழோசையில்
இடம்பெற்ற செவ்விகள்.
28/11/2008 பாகிஸ்தானுடன் தொடர்புடைய சக்திகள்தான் மும்பை தாக்குதலில் ஈடுபட்டுள்ளன என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதிபடக் கூறியிருந்தார். ஆனால் உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்ட தீவிரவாத சக்திகளால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது என்று வேறு பல அவதானிகளும் ஆய்வாளர்களும் கருதுகின்றனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கு சம்பவ இடங்களிலிருந்து சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் இந்தியாவுக்குள்ளிருப்பவர்கள் சிலரே அவர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கியிருக்கலாம் என்று தான் கருதுவதாகவும் தமிழோசையில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு ஆய்வாளர் கே.சுப்பிரமணியம் கூறினார்.
29/11/2008 இந்தியாவின் உளவுத் துறையில் உள்ள குறைபாடுகளையும் மாநில காவல் துறை அமைப்புக்கள் பயங்கரவாதத் தாக்குதல்களை சமாளிக்க திறன் இல்லாமல் இருப்பதையும் மும்பை தாக்குதல்கள் வெளிக்காட்டியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இது குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்ட இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன், தாக்குதல்கள் தடுக்கப்படாமல் போனதற்கு உளவுத் துறையில் குறைகள் இருப்பதை தானும் ஒப்புக்கொள்வதாகவும், அக்குறைபாடுகள் களையப்பட வேண்டுமானால், காவல் துறையில் காணப்படும் அரசியல் தலையீட்டை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். குற்றவியல் நடைமுறைகளில் திருத்தம் வேண்டும், கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று கூறிய அவர், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனைகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டார்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||