 |
|
| வருடாந்திர உரையை ஆற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில், உலக நாடுகளும் இந்தியாவும் தம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று
கோரியுள்ளார்.
உலக நாடுகள் தடைகளை நீக்கி தமது போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்பு இந்தியா எடுத்த நிலை பாதகமாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரபாகரன், ஆனால் தற்போது, இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள்
நிகழ்ந்து வருவதாகவும், அங்கு அடங்கிக்கிடந்த புலிகளுக்கான ஆதரவுக்குரல்கள் இப்போது மீண்டும் ஓங்கி ஒலிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன தமது உறவுகளை தாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
|