|
சதுரங்க உலக சாம்பியன்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
29/10/2008 புதன்கிழமையன்று, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற போட்டியில், ரஷ்ய வீரர் விளாடிமிர் கிராம்ணிக்கை இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன் மூலம், உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 12 ஆட்டங்கள் கொண்ட அந்தப் போட்டியில், ஆனந்த் 6.5 புள்ளிகளும், கிராம்னிக் 4.5 புள்ளிகளும் பெற்றனர். மேட்ச்பிளே என்ற புதிய ஆட்ட முறையிலும் தற்போது அவர் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், பிளிட்ஸ், ரேபிட், நாக்அவுட், டோர்னமென்ட் உள்பட அனைத்து வகையான சதுரங்க போட்டிகளிலும் தலைசிறந்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் ஆனந்த். இதற்கு முன்பு, 2000-வது ஆண்டில் டெஹ்ரானிலும், கடந்த ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற போட்டியிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த். இந்த வெற்றியின் முக்கியத்துவம் குறித்து பிபிசிக்கு ஆனந்த் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||