|
முஷாரஃப் இராஜினாமா
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குற்றம்சாட்டிப் பதவி இறக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலையில், பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் அதிபர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது நலனை விட நாட்டின் நலனே முக்கியம் எனக் கூறி பதவியை இராஜினாமா செய்வதாக தேசத்துக்கு ஆற்றிய உரையில் முஷாரஃப் அவர்கள் கூறியுள்ளார். கடந்த ஒன்பது ஆண்டு காலம் பதவியிலிருந்தபோது தாம் எடுத்த நடவடிக்கைகளையும் அவர் நியாயப்படுத்தியுள்ளார். நாடு விடுதலையடைந்த பிறகு சந்தித்த மிக மோசமான நெருக்கடி காலங்களில் தாம் நாட்டை வழிநடத்திச் சென்றதாகவும் தமது உரையில் முஷாரஃப் அவர்கள் கூறினார். 2001ஆம் ஆண்டு இந்தியாவுடன் போர் உருவாகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது,பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற பல முக்கிய நிகழ்வுகள் முஷாரஃப் பதவியில் இருந்த காலகட்டத்தில் நடந்திருந்தன.
முஷாரஃப் அவர்களை குற்றம் சுமத்தி பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகான செயல்பாடுகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கியதிலிருந்து திரை மறைவில் பாகிஸ்தானில் முஷாரஃப் தொடர்பில் நடந்து என்ன என்று பிபிசியின் உருது சேவையின் தலைவரான ஆமிர் அஹமது கான் தமிழோசையில் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
பாகிஸ்தானின் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் பதவி விலகியுள்ளது என்பது ஒரு நெருக்கடியின் முடிவா அல்லது மற்றொரு நெருக்கடியின் துவக்கமா என்பது குறித்து புதுடில்லியிலிருக்கும் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான சுபா சந்திரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||