|
காமம் - இஸ்லாத்தின் பார்வையில்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாலுறவின் முக்கியத்துவம், அதில் அனுபவிக்க வேண்டிய சுகம் ஆகியவை தொடர்பில் இஸ்லாம் வலியுறுத்தும் விஷயங்களையும் அவை பின்பற்றப்படும்
விதத்தினையும் ஆராயும் குறுந்தொடர்.
பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற விஷயமாகவோ, தப்பு என்பதாகவோ அது பார்க்கவில்லை. மாறாக வேண்டிய அளவிலும் வேண்டிய வகையிலும் சுதந்திரமாக பாலுறவு சுகம் அனுபவிக்க வேண்டும். ஆனால் திருமண பந்தத்துக்குள் மட்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. திருமண பந்தத்துக்குள் தம்பதியர் கலவி இன்பம் அனுபவிக்க வேண்டுமென்று இஸ்லாம் பரிந்துரைக்கிறது. பாலுறவை தடைசெய்யப்பட்ட விஷயமாக அது பார்க்கவில்லை. இஸ்லாத்தில் திருமண பந்தத்துக்குள் எல்லா விஷயங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தம்பதியர் இருவருமே அதற்கு உடன்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை என்கிறார் இமாம் அஜ்மல் மஸ்ரூர். இஸ்லாத்தின்படி திருமண பந்தத்தை தாண்டி, வெளியில், பாலுறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்துக்குள் அது ஊக்குவிக்கப்படுகிறது. இறைதூதர் முகம்மது நபியே கூட, "ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஒரு பெண் ஆணையோ நாடும்போது, பாலுணர்வைத் தூண்டும் காம விளையாட்டுகளில் நன்கு ஈடுபட்டு, புணர்ச்சிக்கு ஒருவரை தயார் செய்துகொள்ள வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்ர்கள் என்று விளக்குகிறார் இமாம் அஜ்மல் மஸ்ரூர். பாலுறவு குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை எமது செய்தியாளர் ஷாஸியா கான் ஆராயும் இந்தக் குறுந்தொடர் நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||