 |
|
| வாசுகி கணேஷானந்தன் - படம் உதவி: பிரஸ்டன் மெர்சண்ட் |
"லவ் மேரேஜ்"( காதல் திருமணம்) என்ற புத்தகத்தை நேயர்களில் சிலராவது கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் அமெரிக்காவில்
வெளியான இந்த ஆங்கில நாவல், இலங்கை இனமோதலை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழ்பவருமான, வாசுகி கணேஷானந்தன் என்ற இளம், பெண்
எழுத்தாளர் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.
இலங்கை இனப்பிரச்சினையை பின்புலமாகக் கொண்டு கடந்த ஒரு சில தசாப்தங்களில் எழுதப்பட்ட சில நாவல்களின் வரிசையில் இதுவும் வருகிறது.
கதை: அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழும், இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண்ணான யாழினியையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஈடுபட்டு
பல ஆண்டுகாலம் போராளியாக இருந்து, நோய்வாய்ப்பட்ட நிலையில், வாழ்க்கையின் இறுதி நாட்களில், கனடாவுக்கு செல்ல புலிகளால் அனுமதிக்கப்படும்
அவரது மாமா, குமரன் ஆகியோரை சுற்றி சுழலும் இந்தக் கதை மூலம், இலங்கையின் இனப்பிரச்சினை, ஆயுதப்போராட்டம், இனப்பிரச்சினையின் சமூகத்தாக்கம்
ஆகியவற்றை வாசுகி ஆராய முயலுகிறார்.
அமெரிக்காவின் ஹார்வார்ட் கல்லூரியில் பயின்று தற்போது நியூயோர்க்கில் வசித்துவரும் வாசுகி கணேஷானந்தனுடன் சமீபத்தில் நடத்திய
உரையாடலிலிருந்து ஒரு சில பகுதிகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
|