BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 ஆகஸ்ட், 2008 - பிரசுர நேரம் 16:55 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மறைந்தார் ஹர்கிஷன்
 
ஹர்கிஷன் சிங் சர்ஜித்
ஹர்கிஷன் சிங் சர்ஜித்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் உறுப்பினாரக தொடர்ந்து இருந்தவருமான ஹர்கிஷன் சிங் சர்ஜித் வெள்ளி மதியம் புதுதில்லியில் காலமானார். அவருக்கு வயது 92.

ஒரு சிறுவனாகவே தன்னை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டிருந்த அவர், தனது 20ஆம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்திருந்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் அவரும் ஒருவர்.

1992 முதல் 2005 வரை இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த அவர், கூட்டணி ஆட்சி யுகத்திற்கு கம்யூனிஸ இயக்கத்தை தயார் செய்ததில் முக்கிய பங்காற்றியிருந்தவர்.

ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களின் வாழ்க்கை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள