BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 ஜுலை, 2008 - பிரசுர நேரம் 14:37 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தாக்குதலுக்குள்ளாகும் தமிழக மீனவர்கள்
 
தமிழக மீனவர்கள்
தென் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகும் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் நீடித்துவருவது தொடர்பில் தமிழோசையில் வெளியான செய்திகள் மற்றும் செவ்விகள்.

19/07/2008

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாவதைக்க ண்டித்து தமிழக அரசு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இது தொடர்பாக தமிழக அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான ஆற்காடு வீராசாமி தமிழோசைக்கு வழங்கிய கருத்துகள்.

தமிழக மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவர் ஹம்சா தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

14/07/2008

இந்தப் பிரச்சினை தொடர்வதற்கு அடிப்படைக் காரணங்கள் குறித்து திருவனந்தபுரத்திலிருந்து இயங்கும் தென்னிந்திய மீனவர் கூட்டுறவு அமைப்புகளுடைய சம்மேளனத்தில் கடல் வள மேலாண்மை துறை இயக்குநரும் இலங்கைக்கு இந்த பிரச்சினை குறித்து ஆராய சென்றுவந்தவருமான டாக்டர் பி.சுப்ரமணியன் தெரிவிக்கும் கருத்துகள்.

12/07/2008

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் ஆற்காட்டுத் துறை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்பைடையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்ததாகவும், மூன்றவது மீனவர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆற்காட்டுத் துறை மீனவர் தலைவர் மயில்வாகனன் வழங்கிய பேட்டி.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி வழங்கிய செவ்வி.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள