BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008 - பிரசுர நேரம் 17:11 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
கோட்டைக்குள் தொழுகைக்கு கோரிக்கை
 
வேலூர் கோட்டை

வேலூர் கோட்டையில் இஸ்லாமிய வழிபாட்டுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கைக்கு கம்யூனிஸ்ட்கள் ஆதரவளித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கோட்டை வளாகத்தில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கோட்டை வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய நடுவணரசின் தொல்லியல் துறை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவருகிறது. இந்த பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு ஒன்று சமீபத்தில் இந்த கோட்டை வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தித் திரும்பியிருக்கிறது.

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பி மோகன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த கோட்டையில் இந்து மத வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய வழிப்பாட்டிற்கும் தொல்லியல்துறை அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்றும், இதற்காக தாங்கள் மத்திய அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள