|
இலங்கை முருகன் சிலை இந்தியாவில்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட முருகப் பெருமானின் சிலை தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் தமிழோசையில் செய்தி வெளியானது. இந்தச் சிலையானது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயத்திலிருந்து 2006ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின்போது காணாமல் போன சிலை என தாங்கள் உணர்வதாகவும் மூதூர் வெருகலம்பதி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சிதம்பரப்பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்திருக்கின்றார். இந்தச் சிலை களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதியுள்ளதாகவும், அவரது பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 11/06/2008
தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் ஒரு தனி நபரிடம் இந்த சிலையை கைப்பற்றியதாக தெரிவிக்கும் காவல்துறையினர், இந்த சிலையின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கையில், இது சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இலங்கையைச் சேர்ந்த முருகன் சிலை என்று தொல்லியல் ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் பழமை காரணமாகவும், இந்த சிலையின் நேர்த்தி காரணமாகவும், சர்வதேச சந்தையில் இதன் விலை பல லட்சமாக மதிப்பிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சிலையைக் கண்டுபிடித்தது குறித்து தமிழக அரசின் சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் டி.ஐ.ஜி. ஆறுமுகம் அவர்களின் செவ்வியை நேயர்கள் கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||