BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மே, 2008 - பிரசுர நேரம் 11:20 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தசாவதாரத்திற்கு தடைகோரி வழக்கு
 
தசாவதாரம் படக்காட்சியில் கமல்
தசாவதாரம் படக்காட்சியில் கமல்
பிரபல நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் தசாவதாரம் என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

தசாவதாரம் திரைப்படத்தின் விளம்பர காட்சிகளில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும், பெருமாளையும் இழிவு படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை உயர்நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார். தமது திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால், இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாம் இது தொடர்பாக மேலதிக கருத்துக்களை வெளியிட இயலாது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

 
 
பிபிசி இணைய தளங்கள்
சர்ச்சையில் 'பிரபாகரன்' திரைப்படம்
28 மார்ச், 2008 | நினைவில் நின்றவை
சிவாஜி - திரைப்படம்
18 ஜூன், 2007 | நினைவில் நின்றவை
மாற்று சினிமா
27 நவம்பர், 2005 | நினைவில் நின்றவை
ஆபாசப் பாடல்கள்: வழக்கு
10 செப்டம்பர், 2005 | நினைவில் நின்றவை
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம்
20 ஆகஸ்ட், 2005 | நினைவில் நின்றவை
பெரிய பட்ஜட் படங்கள்- ஒரு ஆய்வு
30 ஜூன், 2005 | நினைவில் நின்றவை
இந்திய சினிமா தணிக்கை ஆணைய சர்ச்சை
15 அக்டோபர், 2004 | நினைவில் நின்றவை
கன்னட திரைப்பட சர்ச்சை
25 செப்டம்பர், 2004 | நினைவில் நின்றவை
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள