BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மே, 2008 - பிரசுர நேரம் 16:56 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
இலங்கையில் இந்திய தலையீடு சாத்தியமா?
 
இந்திய இலங்கை தேசியக்கொடிகள்
இந்திய இலங்கை தேசியக்கொடிகள்
இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை சமீபகாலமாக தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான செய்திகள் மற்றும் ஆய்வுகள்.

06/05/2008

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் விஜயகாந்த் இந்தியா இலங்கைக்கு ராணுவரீதியான உதவிகளை வழங்குவது பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து டில்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கும் செய்திக் குறிப்பு

01/05/2008

இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை சமீபகாலமாக தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்கள், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையில் சமாதான பேச்சுக்களை துவக்குவதில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கோரியி ருந்தார். இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிடு வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் இலங்கை இனப்பிரச்சினை குறித்து பல தசாப்தங்களாக அவதானித்து வருபவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

23/04/2008

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண இந்திய நடுவணரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் கருணாநிதி இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் போராளிக் குழுக்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத காரணமே ஈழத்தமிழரின் போராட்டத்தினை பலவீனமடையச் செய்துவிட்டது என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்தித்தொகுப்பை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண இந்திய நடுவணரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆற்றிய உரையினை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள