|
சேதுசமுத்திரம் சர்ச்சையில்... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு, தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. சுமார் 2,500 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கை, இது நிறைவேறுவது மகிழ்ச்சிகரமான செய்தி என்று, இதுபற்றி பிரதமரை சந்தித்துப்பேசிய திமுக தலைவர் கருணாநிதி பிபிசி தமிழோசைக்கு அளித்திருக்கும் செவ்வியில் கூறியிருக்கிறார். இந்தத் திட்டம் பற்றி சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மற்றும் தமிழக மீனவர்கள்
மேலும் மீனவர்கள் தரப்பில் வரும் அச்சங்கள், ஐயங்களை எதிர்கொண்டு தீர்க்க, அந்த அச்சங்களை கள அளவில் சென்று தீர்த்த பிறகுதான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது, மூன்று ஆண்டுகளில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தயாநிதி மாறன் கூறினார். சேதுசமுத்திரத் திட்டத்தால் பாதிப்பு இருக்கும்; ஐயங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை - சுற்றுச்சூழல் துறை நிபுணர் அருணாசலம் கருத்து சேதுசமுத்திரத் திட்டத்தில் கடற்பரப்பு தோண்டப்படும் என்பதால், பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா பகுதிகளில், ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை, நிலவியல் பரப்பு ஆகியவை நிச்சயம் பாதிக்கப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறையில் பணிபுரியும் நிபுணர் டாக்டர் அருணாசலம் கூறுகிறார். இந்தத் திட்டம் பற்றி எழுப்பப்பட்ட ஐயங்களை, இந்திய மத்திய அரசு பணித்துச் செய்யப்பட்ட NEERI அமைப்பின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை தீர்க்கவில்லை என்று அவர் கூறினார். குறிப்பாக, சுற்றாய்வுத் தகவல்களை கள ஆய்வாக அந்த விஞ்ஞானிகள் செய்து பெறவில்லை, மாறாக, ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளை அந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது, எனவே அந்த அறிக்கை முழுமையானதல்ல என்று அவர் கூறினார். மேலும், சேதுசமுத்திரத் திட்டத்தின் மூலம் கடற்பரப்பில் தோண்டப்படும் மண் எங்கே, எப்படிக் கொட்டப்படும், அதன் பாதிப்புக்கள் யாவை என்று இந்த அறிக்கையும் சரி, இந்திய அரசும் சரி, இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்றார் அவர். மேலும் மன்னார் வளைகுடாவில் சுனாமியின் தாக்கம் குறைவாக இருந்ததற்கு, இயற்கை அரண்கள் இருந்ததுதான் காரணம், அந்த இயற்கை அரண்கள் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படலாம், இந்த பாதிப்புக்கள் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார். |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||