Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2005 - பிரசுர நேரம் 14:10 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
அணுசக்தி - ஆக்கமா? அழிவா?
 
அணுசக்தி - ஆக்கமா, அழிவா?
விபத்து ஏற்பட்ட செர்நோபில் அணுஉலை..
அணுசக்தி பற்றி நாம் அறிந்தது என்ன, அறியாதது என்ன? - தமிழோசை தரும் சிறப்புப் பெட்டக நிகழ்ச்சித் தொடர்

இரண்டாம் உலக மகாயுததத்தில் அணுகுண்டு என்ற அழிவுசக்தி வெளிப்பட்டு சரியாக அறுபது ஆண்டுகள் ஆகும் இந்நேரத்தில், அணுகுண்டு தவிர அணுசக்திக்குப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

இருந்த போதும், அவை பற்றியும் அவ்வப்போது பிரச்னைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. அணுசக்தியின் பயன்பாடுகள் மற்றும் அவற்றால் விளையும் பிரச்னைகள் பற்றி இந்த சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியில் விரிவாகக் கேட்கலாம்.

கனிவளங்கள் மற்றும் பெற்றோலிய எரிபொருட்கள் குறைந்துகொண்டு வருவதால், மின்சாரம் தயாரிக்க அணுஉலைகளைப் பயன்படுத்தும் போக்கு தற்போது சில நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதே நேரம் வேறு பல நாடுகள், அணுமின் நிலையங்கள் வேண்டாம், அவை ஆபத்தானவை என்ற முடிவை எடுத்திருக்கின்றன.

ரயிலில் செல்லும் அணுக்கழிவுகள்...
ரயிலில் செல்லும் அணுக்கழிவுகள்..

அணுமின் நிலையங்களின் பயன்பாடுகள் யாவை, அவற்றால் வரும் ஆபத்துக்கள் யாவை, குறிப்பாக, அணுக்கழிவுகளை எங்கே, எப்படி, எவ்வளவு காலம் பத்திரமாகப் பராமரிக்க வேண்டியிருக்கிறது என்பது பற்றி முதல் இரண்டு பகுதிகளில் கேட்கலாம்.

அணுமின் நிலையங்களிலிருந்து வரும் கதிரியக்கம் அளவுக்கு அதிகமானால் வருவது புற்றுநோய். அதே நேரம் இந்தப் புற்றுநோயைக் குணப்படுத்தவும் கதிரியக்க சிகிச்சை என்பது தேவைப்படத்தான் செய்கிறது.

குறிப்பாக வளரும் நாடுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கென கதிரியக்க சிகிச்சை எந்திரங்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. ஆனால், இவற்றால், நோயாளிகள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்களா என்பதை அலசுகிறனறன, இந்தத் தொடரின் மூன்றாம், நான்காம் பகுதிகள்.

அணுசக்தியின் மருத்துவத்துறைப் பயன்பாடுகள் பல. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுவது ட்ஸெட்ஸெ ஈ. மனிதன் மற்றும் மிருக இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து பல்வேறு நோய்களைப் பரப்புவது இந்த ஈ தான்.

ஆப்பிரிக்காவின் ட்ஸெட்ஸெ ஈ...
இதைக் கட்டுப்படுத்த கதிரியக்கம்..

குறிப்பாக, மனிதர்களையோ, ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளையோ இந்த ஈ கடித்தால், ஒருவித உறக்க நோய் வந்துவிடுகிறது. இந்த ஈயின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அணுசக்தி எங்ங்னம் பயன்படுகிறது என்பதை, இந்த ஐந்தாவது பகுதியில் கேட்கலாம்.

வேளாண்துறையில் கதிரியக்கத்தின் பயன்பாடு, அதாவது புதிய பயிர்வகைகளை உருவாக்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாகி விட்ட ஒரு விடயம்.

கதிரியக்கம் ஊடாகப் புதிய வாழை
கதிரியக்கம் ஊடாகப் புதிய வாழை

ஆனால், தயாரிக்கப்பட்ட உணவை தொடர்ந்து பாதுகாக்க வேண்டியும் அதன்மீது கதிரியக்கம் செலுத்தப்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிற போதும் அது இதுவரை ஏற்கப்படவே இல்லை. அது எப்படி இனி
விரிவாகப் பார்க்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள