BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2005 - பிரசுர நேரம் 11:20 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
முஸ்லிம் பெண்களின் சமூக நிலை
 
பேராசிரியர் ஜவாஹிருல்லா
பேராசிரியர் ஜவாஹிருல்லா

முஸ்லிம் திருமண மாதிரி நடத்தை நெறி

அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடத்திவந்த மாநாட்டின் நிறைவில் இயற்றிய தீர்மானத்தில், இந்திய முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, தீமைகளைக் களைவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமியத் திருமண நடத்தை நெறியை விளக்கும் 'நிக்காஹ்நாமா' என்ற ஒழுங்கு விதிமுறையையும் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஒழுங்கு விதியில், திருமண வாழ்வில் பெண்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிம் பெண் ஆர்வலர் சல்மா
முஸ்லிம் பெண் ஆர்வலர் சல்மா

மேலும், ஒரு இஸ்லாமியத் தம்பதியர், கணவன் மனைவியாக வாழ்க்கையைத் தொடர வேறு வழியே இல்லை என்கிற பட்சத்தில் மட்டுமே கணவனானவன் மூன்று முறை 'தலாக்' சொல்லி மனைவியை விவாகரத்து செய்யலாம்; மற்ற சமயங்களில் அம்முறை பயன்படுத்தப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த 'நிக்காஹ்நாமா' சீர்திருத்தப் பாதையில் அமைந்த முக்கியப் படி என்று கருதும் முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாவின் கருத்துக்களையும், இந்த திருமண மாதிரி நடத்தை நெறி பெண்களின் உரிமைகளை மீட்டுத் தரும் வலிமை கொண்டதாக அமைந்திருக்கவில்லை என்று விமர்சிக்கும் முஸ்லிம் பெண்ணுரிமை ஆர்வலரும் திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவி சல்மாவின் கருத்துக்களையும் நேயர்கள் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள