 |  முல்லைத்தீவு சுனாமி சோகம் |
சுனாமி பேரலைகள் தாக்கிய இலங்கையில் நிவாரணப்பணிகளின் சுணக்கம் குறித்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இருபதாண்டுகளுக்கும் மேலான போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மாவட்டமான முல்லைத்தீவு மக்களின் நிலை என்ன? விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வடபகுதி மாவட்டத்துக்கு சமீபத்தில் சென்று வந்த எமது செய்தியாளர் எல்.ஆர்.ஜெகதீசன் , இந்தப் பகுதியில் போரின் அழிவை விட சுனாமி தாக்குதலால் ஏற்பட்ட அழிவு மக்கள் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருப்பதைக் கண்டார். " இந்தியாவிற்கு 1990 வாக்கில் அகதியாகச் சென்றதுதான் பெரும் சோகம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அப்போது எங்கள் குடும்பத்தினர், சொந்த உடமைகள் சிலவற்றுடனாவது சென்றோம். இந்த சுனாமியோ ,எங்களை எந்த விதப்பாதுகாப்புமின்றி நிர்க்கதியாக்கிவிட்டது " என்கிறார் முல்லைத்தீவு மீனவர் ஒருவர்.  |  சுனாமி அழிவில் முல்லைத்தீவு |
நிவாரணப்பணிகளில் அரசும் விடுதலைப்புலிகள் மற்றும் தன்னார்வக்குழுக்கள் ஈடுபடுவது, மறு கட்டமைப்புப் ப்ணிகளின் வேகம், கடற்கரையிலிருந்து 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் புதிய வீடுகள் கட்டுவது என்ற புலிகளின் நிலை குறித்து மீனவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை ஆராய்கிறது இந்த இரு பகுதி பெட்டக நிகழ்ச்சி. |