நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.9 எம்பி)

'முஸ்லிம்களின் குற்றங்களுக்கு இனச்சாயம் பூசக் கூடாது' : காதர்

30 ஆகஸ்ட் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 12:30 ஜிஎம்டி

பிரிட்டனில் அண்மைக்காலங்களில் நடந்த இரு நிகழ்வுகள் இங்கு வாழும் முஸ்லிம்கள் குறித்து பெரும்பான்மை சமூகத்தவர்கள் முரணான ஒரு கருதுகோளை மேற்கொள்வதற்கு காரணமாகியுள்ளதாக இங்கு ஊடகங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

மத்திய கிழக்கில் சிரியா, இராக் போன்ற நாடுகளில் செயற்படும் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக இங்கு பிரிட்டனில் வாழ்ந்த கணிசமான வங்கதேச இளைஞர்கள் சென்றமை அதில் ஒரு சம்பவம்.

அடுத்ததாக, இங்கு றொதர்ஹாம் என்னும் இடத்தில் சுமார் 1400 பேர்கள் வரையிலான பெண்களும், சிறுமிகளும் சில ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டமைக்கான குற்றச்சாட்டு அந்தப் பகுதியில் இயங்கிய பாகிஸ்தானிய முஸ்லிம் இளைஞர்களின் வன்முறைக்குழுக்கள் மீது சுமத்தப்படுவதாகும்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும், அவற்றை சார்ந்த கருதுகோள்கள் குறித்தும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரும், சமூக, சர்வதேச ஆய்வாளருமான பி. ஏ. காதர் அவர்களின் செவ்வியை இங்கு கேட்கலாம்.