சிந்திக்கத் தூண்டும் சிகையலங்காரம்

29 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:15 ஜிஎம்டி

மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எட்டு நகரங்களிலுள்ள முடிதிருத்தும் நிலையங்கள் குறித்த ஒரு கண்காட்சி லண்டனில் நடைபெறுகிறது. அதிலிருந்து சில காட்சிகள்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எட்டு நகரங்களிலுள்ள முடிதிருத்தும் நிலையங்கள் குறித்த ஒரு கண்காட்சி லண்டனில் நடைபெறுகிறது. நைஜிரிய நாட்டு புகைப்படக்காரர் ஆண்ட்ரூ எஸிய்போ இதை நடத்துகிறார்.
'பிரைட்' எனும் பெயரில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் முடி திருத்தும் கடைகள் மூலமாக வெளிப்படும் சிகையலங்கார பாணி,தனிநபர் மற்றும் கூட்டு அடையாளங்களை ஆராயும் ஒரு முயற்சி.
நான்கு விஷயங்களை எஸிய்போ உள்வாங்கியிருந்தார். இதன் மூலம் ஆப்ரிக்க ஆடவர்கள் பற்றி எப்படியான கருத்துக்கள் வெளிப்படுகின்றன என்பதை அவர் ஆராய்ந்தார்.
சிகையலங்கார பாணியின் மூலம், முடித்திருத்தும் கலைஞர்கள் அந்த மக்களின் சமூக அடையாளத்தை வெளிக் கொண்டு வருகிறார்கள் என்று எஸிய்போ கூறுகிறார்.
"அங்குள்ள முடிதிருத்தும் நிலையங்களின் வெளிப்புறங்கள், ஆப்ரிக்கத் தெருக்களில் நிலவும் சூழலை உள்வாங்கி சித்தரிக்கப்பட்டுள்ளன"
ஒவ்வொரு முடிதிருத்தும் நிலையமும் பாரம்பரியமும், நவீனமும் ஒருங்கே இணைந்து செல்கின்றன என்பதை காண்பிக்கிறது. கடைக்குள்ளே சில நளினங்களையும் காண முடிகிறது.
இந்தக் கண்காட்சி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை லண்டனின் ஃபிர்ட்சோவாப் பகுதியிலுள்ள டிவானி கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. அந்தக் கலைக்கூடம் சமகால ஆப்ரிக்க கலைகள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு அமைப்பாகும்.