BBC navigation

தலைமைக்கு வந்த 'சக்திகள்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 டிசம்பர், 2013 - 19:36 ஜிஎம்டி
 • தென் அமெரிக்க நாடான சிலியில் நடைபெறவுள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் இரண்டு பெண்மணிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தென் அமெரிக்க நாடுகளில் தொடர்ச்சியாக பெண்கள் தலைமைப் பதவிக்கு வருவதின் மேலும் ஒரு பரிமாணமாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் மிஷேல் பஷலே சிலி நாட்டின் முதல் பெண் அதிபராக 2006 முதல் 2010 வரை பதவி வகித்தார். இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் அவர் மத்திய வலதுசாரி வேட்பாளரான எவ்லீன் மத்தேயை எதிர்த்து போட்டியிடுகிறார்.
 • ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியிலிருந்து ஒரு நாட்டின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை பெற்றவர் மலாவி நாட்டின் அதிபராக இருக்கும் ஜாய்ஸ் பண்டா. அவர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். மகளிர் உரிமைகளின் ஆதரவாளர் என்று அறியப்பட்டு அங்கீகரிக்கப்படுபவர் ஜாய்ஸ் பண்டா
 • மற்றொரு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் அதிபர் எலன் ஜான்சன் சர்லீஃப் அவரது ஆதரவாளர்களால் "இரும்பு பெண்மணி" என்று அறியப்படுகிறார். 72 வயதான அவர் 2011 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை மூன்று பேருடன் இணைந்து பெற்றார். ஆப்ரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றவர். 14 ஆண்டுகள் இடம்பெற்ற மிகவும் மோசமான உள்நாட்டு போர் 2005 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2005 அவர் அதிபராக பதவியேற்றார்.
 • வங்கதேசத்தின் பிரதமராக 2009 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா இரண்டாவது முறையாக பதவியேற்றார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் அவாமி லீக் பெரும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் அவர மத்திய வங்கதேச தேசியக் கட்சியின் தலைவி பேகம் காலிதா ஜியாவை வென்றார்.
 • தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் யுன் ஹி, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே அவர் வென்றார். அவரது தந்தை பார்க் சுங் கீ 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தார்.
 • தாய்லாந்தில் யிங்லுக் ஷிண்வத்ரா ப்யூ தாய் கட்சியை பெரும் வெற்றிபெற வைத்து 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் பதவியை கைப்பற்றினார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தஷின் ஷிண்வதராவின் சகோதரியான இவரே அந்நாட்டின் முதல் பெண் பிரதமர்.
 • டென்மார்க்: இப்போது அங்கே பிரதமராக இருப்பவர் ஹெலி தார்னிங் ஸ்மித் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றத் தேர்தலில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் அவரது கட்சி தலைமையிலான கூட்டணி வென்றது. நெல்சன் மண்டேலாவின் அஞ்சலிக் கூட்டத்தில் அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துக்காக விமர்சனங்களுக்கு உள்ளானார்.
 • டாலியா க்ரீபாஉஸ்காய்தே லித்துவேனியாவின் முதல் அதிபராக 2009 ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டர். அத்தேர்தலில் அவருக்கு 69% வாக்குகள் கிடைத்தன.
 • ஜெர்மனியின் அசைக்க முடியாத தலைவராக இருக்கிறார் ஏங்கலா மெர்க்கல். விவேகமுள்ள மற்றும் யதார்த்தமான ஒரு பெண்மணியாக பார்க்கப்படும் அவர் மக்களால் செல்லமாக அம்மா என்று அழைக்கப்படுகிறார்.
 • நார்வேயின் இரண்டாவது பெண் பிரதமரான எர்னா சொல்பர்க், தனது அமைச்சரவையில் பாதி இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார். வலதுசாரி சிறுபான்மை கூட்டணிக்கு அவர் தலைமை வகிக்கிறார்.
 • ஸ்லொவேனியாவில் முன்னர் அட்சியில் இருந்த அரசு கவிழ்ந்த பிறகு இந்த ஆண்டு பிரதமராக பதவியேற்றார் ப்ராடுஸ்க். முன்னர் இருந்த அரசு சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஊழல் காரணமாக ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
 • கடந்த 2007 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார் கிறிஸ்டினா ஃபெராண்டஸ். அந்த வெற்றிக்கு அவரது கணவர் பிராபல்யமாக இருந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
 • கோஸ்டா ரிக்கவின் முதல் பெண் அதிபராக லாரா சின்சிலா 2010 பிப்ரவரி மாதம் தேர்தெடுக்கப்பட்டார். ஓரினத் திருமணம், கருக்கலைப்பு போன்ற விஷயங்களை கடுமையாக எதிர்ப்பவர். நாட்டின் அரசியலில் ரோமன் கத்தோலிக்க மதத்துக்கு இருக்கும் முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை எனும் கொள்கையை உடையவர் அவர்.
 • ஜமைக்காவில் முதல் பெண் பிரதமரான போர்ஷியா சிம்ப்சன் மில்லர் முதல் முறையாக 2006 ஆம் ஆண்டு பிரதமரானார்.ஆனால் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
 • கமலா பிரசாத் பிஸ்ஸேசர் டிரினிடாட் டொபேகோ நாட்டின் முதல் பெண் பிரதமாராக தேர்வானார். 2010 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது மக்கள் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. நாற்பது ஆண்டுகளாக பதவியில் இருந்த மக்கள் தேசிய இயக்கத்தை அவரது தலைமையிலான கூட்டணி தோற்கடித்தது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.