BBC navigation

மழையை மீறி மக்கள் வெள்ளம்: மண்டேலா நினைவஞ்சலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 டிசம்பர், 2013 - 18:27 ஜிஎம்டி
 • காலஞ்சென்ற நெல்சன் மண்டேலாவுக்கு பன்னாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்களும் செவ்வாய்க்கிழமை நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பங்குபெற்றனர்.
 • இந்த நினைவஞ்சலிக் கூட்டம் ஜொஹனஸ்பர்கிலுள்ள FNB விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
 • இந்த நினைவஞ்சலியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா, எண்ணங்களும் செயல்களும் எவ்வளவு வலிமையானவை என்பதை மண்டேலா உலகுக்கு கற்றுக் கொடுத்தார் என்று புகழ்ந்தார்.
 • மண்டேலாவுக்கான நினைவஞ்சலியை செலுத்த மேடைக்கு செல்லும்போது, இதுவரை இல்லாத வகையில், க்யூபா நாட்டு அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கினார் ஒபாமா. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் இல்லை.
 • நெல்சன் மண்டேலா டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி தனது 95 ஆவயதில் காலாமானார். அவரது இறுதி நிகழ்வுகள் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் வரை பல அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 • பன்னாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நடத்திய சிரில் ராமஃபோசா அவர்கள், மண்டேலாவின் நீண்ட நடை பயணம் முடிவுக்கு வந்துவிட்டது....இனி அவர் ஓய்வெடுக்கலாம் என்று தனது அறிமுக உரையில் கூறினார்.
 • இந்த நிகழ்வில் உரையாற்றிய மூத்த பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ, அவர் சிறையிலிருந்து வெளிவந்த தருணம் முதல் நாட்டில் ஒரு ஒற்றுமைப் பாலமாகத் திகழ்ந்தார் என்றும், அவரது வேதனைகள் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன என்றாலும், நமது வருத்தம் மேலோங்கியுள்ளது என்று கூறினார்.
 • இந்த நினைவஞ்சலி , அண்மையக் காலத்தில் மிகப் பெரிய அளவில் பன்னாட்டுத் தலைவர்கள் கூடிய நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
 • இந்த நிகழ்வுக்கு வரும் பலர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்கிற அச்சம் ஒரு புறம் இருந்தது. எனினும் கடும் மழையின் காரணமாக 95,000 இருக்கைகள் கொண்ட அந்த விளையாட்டு அரங்கின் பல பகுதிகள் காலியாகவே இருந்தன.
 • மறைந்த மண்டேலாவின் மனைவி கிராஷா மஷேல் நினைவஞ்சலிக்கு வந்த போது அவருக்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
 • அதேபோல, அவரது முன்னாள் மனைவி வின்னி மடிக்கிசேலா மண்டேலா வந்த போது மக்கள் அவருக்கும் பெருத்த வரவேற்பு இருந்தது. அவர் கிராஷா மஷேலை கட்டியணைத்து முத்தமிட்டார்.
 • எனினும் தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. நினைவஞ்சலியின் முக்கிய உரையை அவர் ஆற்றியபோது அவரை அவமதிக்கும் வகையில் கூக்குரல்கள் எழுப்பப்பட்டன.
 • ஜொஹனஸ்பர்க்கில் இப்போது பருவ மழை காலம் இல்லையென்றாலும், மண்டேலாவின் மரணத்துக்கு பிறகு அங்கு மழை பெய்து வருகிறது. இருந்தாலும் நினைவாஞ்சலி அரங்கத்தில் ஒரு உற்சாக, கொண்டாட்ட மனோபாவம் காணப்பட்டது.
 • கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே அரங்கில் குழுமியவர்கள் ஆடியும் பாடியும் அஞ்சலி செலுத்தினர்.
 • இந்த நினைவஞ்சலிக் கூட்டம் உலகம் முழுவதும் ஒளிபரப்பானது. தென் ஆப்ரிக்காவிலும் பலர் இதைப் பார்த்தனர்.
 • அடுத்த மூன்று நாட்கள்(புதன், வியாழன், வெள்ளி) மண்டேலாவின் உடல் பிரெட்டோரியாவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். டிசம்பர் 15 ஆம் தேதி கிழக்கு கேப் மாகாணத்திலுள்ள அவரது சொந்த கிராமமான கூனுவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.