BBC navigation

நேபாளத்தில் மிகப் பழமையான பௌத்த ஆலயம் கண்டுபிடிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 நவம்பர், 2013 - 17:48 ஜிஎம்டி

பிரார்த்தனையில் ஈடுபடும் புத்த பிக்குகள்

புத்தர், கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு நேபாளிலுள்ள லும்பினியில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலின் கீழே, மரத்தால் செய்யப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்தின் இடிபாடுகளுக்கான சில தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மரத்தாலான அந்த வழிபாட்டுத் தலத்தில், ஒரு திறந்த வெளியும் ஒரு மரமும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புத்தர், திறந்தவெளியில் ஒரு மரத்தடியில் பிறந்தார் என்ற பாரம்பர்ய நம்பிக்கையுடன் இந்த புதிய கண்டுபிடிப்பு ஒத்துப் போவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு முன்னதாக, இந்து ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜகுமாரனான புத்தர், அனைத்து சுகங்களையும் துறந்து, ஞானத்தை உணர்ந்த வாழக்கையை வாழ்ந்து போதனைகளை செய்தது கி மு நான்காம் நூற்றாண்டில் நடந்தது என்று பல அறிஞர்கள் கருதியிருந்தனர்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.