BBC navigation

'நிண்டெண்டோ' நிறுவனத் தலைவர் காலமானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 செப்டம்பர், 2013 - 12:07 ஜிஎம்டி

நிண்டெண்டோவை, ஒரு உலக அளவிலான, விடியோ விளையாட்டு நிறுவனமாக மாற்றிய ஜப்பானிய வர்த்தகர் , ஹிரோஷி யமௌச்சி, தனது 85வது வயதில் காலமானார்.

1949லிருந்து சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான காலம் இந்த நிறுவனத்தை யமௌச்சி நடத்தினார்.

ஒரு சிறிய விளையாட்டு சீட்டுகள் தயாரிப்பு நிறுவனமாக இருந்த இந்த நிறுவனத்தை டிஜிட்டல் யுகத்தில் மிகவும் வெற்றிகரமான ஒரு விடீயோ விளையாட்டுகளை தயாரிக்கும் சக்தியாக மாற்றியவர் இவர்.

நிண்டெண்டோவை வீடியோ விளையாட்டுத் தொழிலில் ஒரு முன்னோடி நிறுவனமாக தலைமை தாங்கி நடத்தி, கேம் பாய் மற்றும் நிண்டெண்டோ டி.எஸ் ஆகிய கைகளில் வைத்து விளையாடும் கன்சோல்கள் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றவர் யமௌச்சி என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.