விஷம் வைத்து வேட்டையாடுபவர்களால் கழுகுகளுக்கு பாதிப்பு

  • 12 செப்டம்பர் 2013
இறையைத் தின்ன போட்டியிடும் கழுகு
இறையைத் தின்ன போட்டியிடும் கழுகு

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் சட்டவிரோத வேட்டை காரணமாக அங்கேயிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக வன உயிர் பாதுகாப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோத வேட்டையை வன அதிகாரிகள் கண்டுபிடிக்கக் கூடாது என்ற நோக்கில், சிலர் கொல்லப்பட்ட யானைகள், காண்டாமிருகங்கள் போன்றவற்றின் உடல்களின் விஷத்தை செலுத்திவிடுகின்றனர்.

பொதுவாக இறந்த மிருகங்கள் இருக்கும் இடத்தின் மேல் கழுகள் மற்றும் பருந்துகள் வட்டமிடும். இதைவைத்து, குற்றம் நடந்த இடத்தை வனக்காவலர்கள் எளிதில் கண்டுபிடிப்பார்கள்.

இப்போது உலகில் 10 ஆயிரத்துக்கும் குறைவான கேப் கழுகுகள்தான் இருக்கின்றன. விஷம் வைக்கப்பட்ட ஒரு யானையின் உடல், 600 கழுகுகளைக் கொல்லக் கூடியது.

இது தவிர வேட்டை காரணமாகவும் பல கழுகுகள் கொல்லப்படுகின்றன.