BBC navigation

ஃபொன்டேரா பால்மா தொற்று: நியுசிலாந்து அரசு விசாரணை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஆகஸ்ட், 2013 - 11:18 ஜிஎம்டி
ஒரு சில நாடுகளுக்கு சென்ற ஏற்றுமதி தொகுதிகளில் பக்டீரியா கலப்படம் உள்ளதாக ஃபொன்டேரா அறிவித்திருந்தது

சீனா, சவுதி உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு சென்ற ஏற்றுமதி தொகுதிகளில் பக்டீரியா கலப்படம் உள்ளதாக ஃபொன்டேரா அறிவித்திருந்தது

நியுசிலாந்திலிருந்து ஏற்றுமதியாகும் பால்மா வகைகளில் பொட்டுலிஸம் என்ற ஒருவகை பக்டீரியா தொற்று கலந்திருப்பதாக வெளியாகியுள்ள சர்ச்சைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

நியுசிலாந்தின் மிகப்பெரிய பால்மா நிறுவனமான ஃபொன்டேராவின் ஏற்றுமதிகளில் இந்த தொற்று கலந்திருப்பதாக அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சை நிலவுகிறது.

உயிரிழப்பை ஏற்படுத்துமளவுக்கு கடுமையான உடல்நலக் குறைவை உருவாக்கக்கூடிய பொட்டுலிஸம் பக்டீரியா தொற்று, தமது பால்மா ஏற்றுமதி தொகுதிகள் சிலவற்றில் கலந்திருக்கலாம் என்று இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஃபொன்டேரா ஊகம் வெளியிட்டிருந்தது.

குழந்தைகளுக்கான பால்மா வகைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான பானங்களிலும் இந்த தொற்று கலந்திருக்கலாம் என்று ஃபொன்டேரா கூறியது.

இதனால் சீனா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஃபொன்டேரா தயாரிப்புகளை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

இந்தப் பிரச்சனையை ஃபொன்டேரா கையாண்ட விதம் தொடர்பிலும் அந்த நிறுவனம் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது.

நியுசிலாந்தின் ஏற்றுமதிகளில் கால்வாசி பங்கு பால்மா ஏற்றுமதி மூலமே நடக்கிறது.

இந்த பக்டீரியா கலப்படம் எப்படி நடந்தது என்று ஃபொன்டேராவும் தனியான விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.