படங்களில்: அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்காக காத்திருக்கும் பிரிட்டன்

22 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 11:31 ஜிஎம்டி

பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேம்பிரிட்ஜ் சீமாட்டி குழந்தை பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வில்லியம் தம்பதி பற்றிய குறிப்பு படங்களில்
தம்பதிகள் திருமண நாளன்று
இளவரசர் வில்லியமும் கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டனும் 2011 ஏப்ரலில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அதன் பின்னர் உலகின் பல பாகங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்றுவந்தனர்.
கிங் எட்வர்ட் VII  மருத்துவமனையிலிருந்து தம்பதிகள் வெளியேறியபோது
2012- டிசம்பரில் மசக்கை காரணமாக வில்லியம் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமுற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
பழைய பள்ளிக்கூடத்தில் ஹாக்கி விளையாடியபோது
அதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், அவர் முன்னர் ஹாக்கி அணிக்கு தலைமை தாங்கிய அவரது பழைய பள்ளிக்கூடத்தில் கேட் ஹாக்கி விளையாடினார்.
2013 ஏப்ரலில் கிளாஸ்கோவில்
கடந்த ஜூன் இறுதிவரை பொது நிகழ்வுகளில் கலந்துவந்தார் சீமாட்டி.
இந்த ஆண்டில் இருவரும் குடியேற இருக்கும் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வீட்டின் அழகுபடுத்தல் வேலைகளை தம்பதியர் தொடங்கினர்.
சார்ல்ஸ் தம்பதியரும் மருமகளும்
முதற்தடவையாக பாட்டனாராக ஆக இருக்கும் வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் தம்பதியுடன் மருமகள் கேட்
ரோயல் பிரின்ஸெஸ் கப்பல் பெயரிடப்பட்டபோது
கடந்த ஜூனில் ரோயல் பிரி்ன்ஸெஸ் கப்பலுக்கு பெயரிடப்பட்டது. ஹரி-கேட் தம்பதியினர் தமது குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்துகொள்ள விரும்பவில்லை.
அரச குடும்பம் மகாராணியின் பிறந்த நாளில்
கேம்பிரிட்ஜ் சீமாட்டி பிரசவத்துக்கு முன்னதாக இறுதியாக எலிசபெத் மகாராணியின் ஜூன் 15 பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டார்.
பெடிங்டன் சென்.மேரிஸ் தனியார் மருத்துவமனைக்கு முன்னால் ஊடகவியலாளர்கள்
அரச குடும்பத்தின் புதிய வாரிசின் செய்திக்காக பெடிங்டன் சென்.மேரிஸ் தனியார் மருத்துவமனைக்கு முன்னால் பல வாரங்களாக ஊடகவியலாளர்கள் முகாமிட்டிருக்கிறார்கள்.