BBC navigation

சோமாலியக் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்த 11 பேர் உயிர்தப்பினர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 ஜூலை, 2013 - 16:51 ஜிஎம்டி
உயிர்தப்பிய 11 பேரில் 3 பேர் இலங்கையர்கள். 4 இலங்கையர்களின் கதி தெரியவில்லை

உயிர்தப்பிய 11 பேரில் 3 பேர் இலங்கையர்கள். 4 இலங்கையர்களின் கதி தெரியவில்லை. உயிர்காப்பு படகுகள் பல கரையொதுங்கியுள்ளன

சோமாலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்தபோது, கடந்தவாரம் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 11 கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியுள்ளதாக அந்தப் பிராந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 11 பேரில் இலங்கையர்கள் 3 பேர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடற்கொள்ளையர்களின் பிடியிலுள்ள இன்னொரு மீன்பிடி கப்பலுக்கு இவர்கள் கடைசிநேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் ஜோன் ஸ்டீட் பிபிசியிடம் தெரிவித்தார்.

கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச செயலகத்தின் தலைவர்

சோமாலிய கடலில் மூழ்கிய கப்பல்: 11 பேர் தப்பினர், 4 பேரை காணவில்லை

கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச செயலகத்தின் தலைவர் ஜோன் ஸ்டீட் பிபிசிக்கு அளித்த செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கப்பலில் இருந்துள்ள 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை என்று கூறிய ஜோன் ஸ்டீட், காணாமல்போன 4 பேருமே இலங்கையர்கள் என்றும் கூறினார்.

எல்பேடோ என்ற இந்தக் கப்பல் மூழ்கியபோது அதிலிருந்து வெளிப்பட்ட அவசர உதவி உயிர்காப்பு படகுகள் பல நீண்டதூரம் கடந்து கரையொதுங்கியுள்ளதை ஐரோப்பிய கடற்படையினர் உறுதிசெய்துள்ளனர்.

அந்தப் படகுகள் மூலம் கடற்கொள்ளையர்கள் அல்லது கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மூழ்கிய எல்படோ வர்த்தகக் கப்பலில் இருந்து 11 பணியாளர்கள் நாய்ஹம்-3 என்ற மீன்பிடிக் கப்பலுக்கு மாற்றப்பட்டநிலையில், ஏற்கனவே 29 பேருடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த நாய்ஹம்-3 கப்பலும் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக ஜோன் ஸ்டீட் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும், பணையம் வைக்கப்பட்டுள்ள சில கப்பல் பணியாளர்களை குடும்பத்தினருடன் பேச கொள்ளையர்கள் அனுமதித்துள்ளதாகவும் கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.