BBC navigation

உணவுக்காக அல்லாடும் ஆப்கான் நாட்டு மக்கள் -படங்களில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஜூன், 2013 - 10:06 ஜிஎம்டி
 • ஒரு வண்டியின் பின்பகுதியில் சில குழந்தைகள்
  உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக ஆப்கானின் பமியான் மாகாணத்தில் வாழும் மக்கள் தமது இடங்களை விட்டு அகலும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இயற்கை வளங்களின் மீதான அழுத்தங்கள் அங்கு காடழிப்பு மற்றும் கணிகளின் தரம்குறைவு ஆகியவற்றுக்கு வழி செய்துள்ளது.
 • உண்ணுகின்ற ஒரு குழந்தை
  உலகில் மிகவும் கடுமையான போசாக்கின்மைக்கு ஆளான குழந்தைகளில் ஆப்கான் குழந்தைகளும் அடங்குவதாக உலக வங்கி கூறுகிறது. வருடக்கணக்கில் இவர்கள் போசாக்கின்றி இருக்கிறார்கள். நாட்டின் 30 வீதத்துக்கும் அதிகமானோர் அன்றாடம் தேவைப்படும் கலோரிகளை விட குறைவான உணவுகளையே பெறுகின்றனர். ஆப்கானின் 80 வீதமான கிராமங்களில் நிலைமை மேலும் மோசமாகும்.
 • தானியக் கடை ஒன்றில்...
  பமியானில் வாழும் குடும்பங்கள் தமது உழைப்பில் பெரும்பகுதியை உணவுக்கே செலவிடுகின்றன. நல்ல வாய்ப்புக்களுக்காக நாட்டின் எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டியிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
 • ஒரு காய், கறிச் சந்தை
  உள்ளூர் கடைகளில் கிடைக்கும் பழங்கள், காய், கறிகள் போன்றவை பாகிஸ்தான், இரான் மற்றும் இந்தியாவில் இருந்து வருபவையாகும். அந்த உணவுகளின் விலை 60வீதத்தால் அதிகரித்துள்ளன. அவற்றை வாங்கி உண்ணும் நிலையில் வறிய குடும்பங்கள் இல்லை.
 • பால் கறக்கும் ஒரு விவசாயி.
  கால்நடைகளை வைத்திருப்போரின் எண்ணிக்கையும் குறைவதுடன், கால்நடைகளும் குறைந்து வருகின்றன. பெரும்பாலும் விலங்குகள் இறைச்சிக்காக அல்லாமல் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன.
 • ஒருவர் ரொட்டியை செய்கிறார்.
  ரொட்டிகளை மூன்று வேளையும் உண்ணும் அவர்களுக்கு எரிபொருள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. இதனால் பெருமளவு காடுகளும் அழிக்கப்பட்டுவிட்டன.
 • ரொட்டியும், வெண்ணையும்.
  ரொட்டி, நெய், சீனி போன்றவைதான் பெரும்பாலும் உண்ணப்படுகின்றன.
 • சமையலறையில் வேலை செய்யும் ஒரு பெண்
  சமையலறை தோட்டங்களுக்கான திட்டத்தின் மூலம் பெண்களும் ஊட்டச் சத்தை அதிகரிப்பதற்கான திட்டம் ஒன்றில் சுவிஸை சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபடுகிறது.
 • கோதுமை விதைகளுடன் ஒருவர்
  விதைகளின் உற்பத்தியை பெருக்கும் திட்டம் ஒன்றிலும் அது ஈடுபடுகிறது.
 • மாரிகாலத்தில் சுமார் 6 மாதங்களுக்கு விவசாயிகள் தமது குடும்பங்களுக்கு தேவையான உணவைக் கூட அறுவடை செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.