அமெரிக்கா செல்லமுயன்று குற்றக்கும்பலிடம் மாட்டியவர்கள் மீட்பு

  • 7 ஜூன் 2013
வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்றவர்கள் மெக்சிக்கோ குற்றக்கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு கூட்டிச் செல்வதாக கூறியவர்கள் மெக்சிக்கோ குற்றக்கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர்.

மெக்சிக்கோவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குற்றக் கும்பலொன்றால் கடத்தி, பிடித்துவைக்கப்பட்டிருந்த 165 வெளிநாட்டவர்களை மீட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இவர்கள், மெக்சிக்கோவின் வடக்குப் பிராந்தியமான தமௌலிபாஸ் மாநிலத்தில் குற்றக் கும்பலொன்றிடம் சிக்கிக்கொண்டுள்ளனர்.

அந்தக் குற்றக்கும்பல், பிடித்துவைக்கப்பட்டவர்களின் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டிவந்துள்ளது.

குற்றக்கும்பலின் கைகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லும் வேலையில் ஈடுபட்டிருந்த குழுக்களே அவர்களை ஒரு குற்றக்கும்பலிடம் ஒப்படைத்து துரோகம் இழைத்துள்ளது.

அவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த கட்டடத்தை சுற்றிவளைத்த ஆயுதந்தரித்த இராணுவத்தினர் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் இரண்டு கர்ப்பிணி பெண்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.