BBC navigation

படங்களில்: உலகின் விமானப் பாதைகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மே, 2013 - 09:13 ஜிஎம்டி
  • உலகெங்குமான விமானப் பாதைகளை வரைபடமாக காட்சிப்படுத்தும் முயற்சியில் ஆருப் என்ற சர்வதேச பொறியியல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மைக்கேல் மார்க்கியெட்டா ஈடுபட்டிருந்தார். உலகமெங்கிற்குமான விமான பாதை வரைபடம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.
  • விமானப் பயணத் தரவுகளை இட்டு வரைபடம் ஒன்றை உருவாக்கும் பணியை தனது ஓய்வு நேரத்தில் இவர் மேற்கொண்டிருந்தார்.
  • உலக வரைபடத்தின் மீது விமானப் பாதைத் தரவுகளை இட வேண்டும் என்ற அவசியம் தனக்கு ஏற்படவில்லை என்றும், விமானப் பாதைகளை பார்க்கும்போதே அதில் கண்டங்களின் எல்லைகள் தெரிந்தன என்று மார்க்கியெட்டா கூறுகிறார்.
  • உலக அளவில் பார்க்கையில் தற்போது 58 ஆயிரம் விமானப் பாதைகள் உள்ளன. ஒவ்வொரு விமான நிலையமும் இப்பாதைகளை சிறிது சிறிதாக தமக்கிடையே பகிர்ந்துகொள்கின்றன.
  • உலகிலேயே மிக அதிகமான விமான பாதைகளைக் கொண்ட விமான நிலையம் என்றால் அது 235 பாதைகளைக் கொண்ட ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் விமான நிலையம்தான்.
  • ஒவ்வொரு கண்டத்திலும் மிக அதிகமான பாதைகளைக் கொண்ட விமான நிலையங்கள் என்றால், தென்னமெரிக்காவுக்கு சா போலோ, ஆசியாவுக்கு பெய்ஜிங், ஆஸ்திரேலியாவுக்கு சிட்னி, ஐரோப்பாவுக்கு பிராஞ்க்ஃபர்ட், அமெரிக்காவுக்கு அட்லாண்டா, ஆப்பிரிக்காவுக்கு கெய்ரோ ஆகியவற்றைச் சொல்லலாம்.
  • பல விமான பாதைகள் ஒன்றோடு ஒன்று சேரும் விதமாக உள்ளதால் அவற்றை வரைபடத்தில் தனியாக காட்டுவதென்பது சிரமமான வேலைதான். அதிலும் அதிகமான விமானப் பாதைகள் உள்ள மத்திய ஐரோப்பாவிலும், கிழக்கு அமெரிக்காவிலும் இந்தப் பிரச்சினை அதிகம்.
  • நீல நிறத்திலேயே பல்வேறு அடர்த்திகளைப் பயன்படுத்தி குறுகிய விமானப் பாதைகளையும், ஒன்றோடு ஒன்று சேருகின்ற பாதைகளையும் மார்க்கியெட்டா வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார்.
  • உலகின் பெரு நகரங்களில் அதிகமான விமானப் பாதைகள் சேருவதால் அவை ஒளி அடர்ந்த இடங்களாக இந்த வரைபடத்தில் அமைந்துள்ளன.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.