BBC navigation

ஜப்பானிய அரசியல்வாதியை சந்திக்க மறுக்கும் முன்னாள் பாலியல் அடிமைகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 மே, 2013 - 11:42 ஜிஎம்டி
முன்னாள் பாலியல் அடிமைகளான கொரிய பெண்கள் இருவர் சோலில் உள்ள ஜப்பானிய தூதரகம் முன்பாக கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

முன்னாள் பாலியல் அடிமைகளான கொரிய பெண்கள் இருவர் சோலில் உள்ள ஜப்பானிய தூதரகம் முன்பாக கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானிய காலனித்துவ இராணுவத்தால் பாலியல்-அடிமைகளாக நடத்தப்பட்ட கொரிய பெண்கள் இருவர் ஜப்பானிய அரசியல்வாதி ஒருவரை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் பெண்களை பாலியல்-அடிமைகளாக நடத்தியதை நியாயப்படுத்தி ஜப்பானின் ஒசாக்கா பிராந்தியத்தின் மேயர் டோரு ஹஷிமோட்டோ கருத்துக் கூறியிருந்ததை அடுத்தே, 80களின்- வயதில் இருக்கும் இரண்டு பெண்களும் அவரை சந்திக்க மறுத்துள்ளனர்.

தம்மை சந்தித்தால் அவர் தம்மிடம் போலியாக மன்னிப்பு கோரிவிட்டு, அதன்மூலம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமையை சமாளிக்கப் பார்ப்பார் என்று அந்தப் பெண்கள் இருவரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் போர் பாதுகாப்பு முன்-அரண்களில் பாலியல் தொழில் அவசியமாக இருந்ததாக ஒசாக்கா மேயர் ஹிஷிமோட்டோ நியாயம் கற்பித்திருந்தார்.

இந்த நிலைமையில், ஜப்பான் மீது மட்டும் பழி சுமத்துவது நியாயமற்றது என்றும் அவர் கூறியிருந்தார்.

சீனாவிலும் பசிபிக் பிராந்தியங்களிலும் ஜப்பானிய இராணுவம் போர்க்காலத்தில் சுமார் 2000 ஆசியப் பெண்களை பாலியல் தேவைக்காக அடிமைகளாக வைத்திருந்ததாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.