BBC navigation

படங்களில்: பச்சைக் குத்தும் கலைஞர்கள் நேபாளத்தில் கூட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஏப்ரல், 2013 - 11:18 ஜிஎம்டி

பச்சைக் குத்தும் கலை: நேபாளத்தில் கூட்டம்

  • ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த பச்சை குத்தும் கலைஞ்சர் லெஸ்டின் ஃபிளை. இவர் இயந்திரத்தால் அல்லாமல் கையால் பச்சைக் குத்துவதையே விரும்புகிறார்.
  • பச்சைக் குத்திக்கொள்ளுதல் என்பது ஒரு பண்டையக் கலை. பல்வேறு காரணங்களுக்காக இன்றும் பலர் பச்சை குத்திக்கொள்கின்றனர். சிலர் இதனை ஃபேஷன் என்கிறார்கள், சிலர் இதனை உடலில் செய்யும் கலைப்படைப்பு என்கிறார்கள். வேறு சிலர் இதனை ஆன்மிக வெளிப்பாடு என்கின்றனர்.
  • இந்து மத தெய்வங்களின் உருவங்களை உடலில் வரைந்துகொள்வது என்பது மேற்குலகத்தில் மோஸ்தராகி வருகிறது.
  • பச்சைக் குத்துவதை ஆரோக்கியம் கெடாமலும், விபத்து ஏற்படாலும் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பச்சை குத்தும் கலைஞர்களிடமும் குத்திக் கொள்ளும் ஆர்வர்களிடமும் தற்போது காணமுடிகிறது.
  • இந்தியாவின் சாதுக்கள் தமது உடலை வைத்துக்கொண்டு என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாகக் கூறுகிறார் ஐக்கிய ராஜ்ஜியத்ச் சேர்ந்த குவெண்டின் கலிமா
  • பல்வேறு சமூகங்களின் கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் பச்சை குத்தப்படுகிறது. இப்படத்தில் இருப்பவர் டுருமகினா டுலீ.
  • பச்சைக் குத்திக்கொள்வது, உடலில் வர்ணங்கள் கொண்டு படம் வரைந்துகொள்வது எல்லாம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள ஒருவருக்குள்ள வழி. அதனை தவறான விஷயமாகப் பார்க்கக் கூடாது என்று வாதிடுகிறார் ஸ்வீடனைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் அனியெலா "ஃபுரு டுவா".
  • சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வடிவங்களை அறுவை சிகிச்சை மூலம் தோலுக்கடியில் வைத்து உடற்பாகங்களின் வடிவத்தை மாற்றிக்கொள்வதென்பதும் தற்போது நடக்கிறது.
  • பச்சைக் குத்திக்கொள்ள விரும்புபவர்கள் வரிசையில் நின்று தங்களுக்கு விருப்பமான உருவங்களை உடலில் பச்சை குத்திக்கொண்டனர்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.