பாக். தேர்தலில் போட்டியிட முஷரஃப்புக்கு அனுமதி

  • 7 ஏப்ரல் 2013
முஷரஃப்
பெர்வேஸ் முஷரஃப்

பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் இராணுவத் தலைவர் பெர்வேஸ் முஷரஃப்புக்கு அந்நாட்டின் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

நாட்டின் வடக்கே ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள சித்ரால் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராகப் போட்டியிட முஷரஃபுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

வேறு இரண்டு இடங்களில் போட்டியிட அவர் செய்திருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்துக்கு வந்திருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானை ஆண்டிருந்தார்.

நாடு கடந்து வாழ்ந்துவந்த அவர், சென்ற மாதம்தான் பாகிஸ்தானுக்குத் திரும்பியிருந்தார்.

2007ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முஷாரஃப் எதிர்கொண்டுவருகிறார்.