BBC navigation

'பர்மிய வன்முறைகளுடன் படையினருக்குத் தொடர்பு இல்லை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 மார்ச், 2013 - 11:35 ஜிஎம்டி
வன்முறைகளைத் தடுக்காது காவல்துறையினரும் படையினரும் வேடிக்கை பார்ப்பதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்கிறது அரசு

வன்முறைகளைத் தடுக்காது காவல்துறையினரும் படையினரும் வேடிக்கை பார்ப்பதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்கிறது அரசு

பர்மாவில் பெரும்பான்மை பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்துவரும் இன வன்முறைகளில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களை அந்நாட்டு அரசாங்கம் மறுத்துள்ளது.

கடந்த வாரம் பர்மாவுக்கு சென்றிருந்த ஐநாவின் மூத்த அதிகாரியொருவர், அங்கு நடந்துவரும் மோதல்களில் அரசுக்குத் தொடர்புள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார்.

பௌத்தர்களான வன்முறையாளர்கள் தாக்குதல்களில் ஈடுபடும்போது படையினர் அவற்றைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக தவல்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அரசாங்கம் கூறுகிறது.

பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் மத, சிவில் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிவருவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.