குதிரை இறைச்சி குற்றச்சாட்டால் ரோமானிய பிரதமர் கோபம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 பிப்ரவரி, 2013 - 16:38 ஜிஎம்டி
 குதிரை இறைச்சி காணப்பட்ட மாட்டிறைச்சி உணவு

குதிரை இறைச்சி காணப்பட்ட மாட்டிறைச்சி உணவு

ஐரோப்பா முழுவதும் விற்கப்பட்டுள்ள மாட்டிறைச்சி உணவுப் பொருட்களில் குதிரை இறைச்சி காணப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து, தனது நாட்டின் இறைச்சி தயாரிப்புத் துறையை விட்டுக்கொடுக்காமல் ரோமானிய அரசாங்கம் பேசிவருகிறது.

ரோமானியாவிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களுக்கு தவறுதலாக லேபல்கள் குத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அந்நாட்டின் பிரதமர் விக்டர் பொன்டா கூறுகிறார்.

தனது நாட்டின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டால் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.

குதிரை இறைச்சி எந்த இடத்தில் மாட்டிறைச்சியானது என்பதை கண்டறிவதற்காக பிரான்ஸில் இறைச்சி இறக்குமதி செய்து பதப்படுத்தும் இரண்டு தொழிற்சாலைகளுக்கு நிபுணர்கள் சென்றுள்ளனர்.

குற்றஞ்செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.