"பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஜனவரி, 2013 - 16:56 ஜிஎம்டி
பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்

ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற முடியாதென அந்நாட்டின் உழல் தடுப்புப் பிரிவின் தலைவர் முடிவு எடுத்துள்ளார்.

இது குறித்த விசாரணையில் அவரை கைது செய்யத் தேவைப்படும் அளவுக்கு ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று தேசிய ஊழல் கண்காணிப்புத் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பசியா போக்ஹாரி கூறியுள்ளார்.

ஏற்கனவே இருக்கும் ஆவணங்களை மீளாய்வு செய்ய விரும்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் சர்ச்சைகுரிய மத குருவை, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தாரிக் உல் காத்ரி பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசாங்க கட்டிடங்கள் முன்பு கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முகாமிட்டுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.