பெர்லுஸ்கோனி விவாகரத்து: மாதம் 40 லட்சம் டாலர் ஜீவனாம்சம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 டிசம்பர், 2012 - 15:29 ஜிஎம்டி

பெர்லுஸ்கோனி இளம் பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதற்காக வெரோனிகா விவாகரத்து கேட்டிருந்தார்.

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதற்கான ஒப்பந்தத்தின் அங்கமாய் அவருக்கு மாதா மாதம் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் டாலர் ஜீவனாம்சம் கொடுத்துவர சம்மதித்துள்ளார்.

சில்வியோ பெர்லுஸ்கோனி இளம் பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டி இரண்டாவது மனைவி வெரோனிகா லாரியோ மூன்று வருடங்களுக்கு முன் விவாகரத்து கோரியிருந்தார்.

பெர்லுஸ்கோனிக்கு மூன்று பிள்ளைகளைப் பெற்றவர் வெரோனிகா ஆவார்.

மிலான் நகருக்கு அருகில் பெர்லுஸ்கோனியும் வெரோனிகாவும் வாழ்ந்துவந்த 10 கோடி டாலர் மதிப்புடைய பெரிய மாளிகை வீடு பெர்லுஸ்கோனியின் பெயரிலேயே இருக்கும் என்று இந்த விவாகரத்து சொத்துப் பங்கீட்டு ஒப்பந்தம் அமைந்துள்ளதாக கொரியெர் டெல்லா செரா என்ற இத்தாலிய செய்தித்தாள் கூறுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.