கறுப்பு பணம்: பிரிட்டனில் கைதான தமிழர்களுக்கு பிணை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 டிசம்பர், 2012 - 15:30 ஜிஎம்டி
சர்வதேச ரயில் நிலையத்தில் கைதான பயணியிடம் 3 லட்சம் பவுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

சர்வதேச ரயில் நிலையத்தில் கைதான பயணியிடம் 3 லட்சம் பவுண்டுகள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

பிரிட்டனில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பரில் லண்டனின் செண்ட் பேங்க்ராஸ் சர்வதேச ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பயணியை பிரிட்டனின் எல்லைப்புற பாதுகாப்பு நிறுவனப் போலிசார் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் பவுண்டுகள் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விசாரணைகள் தொடங்கின.

இதையடுத்து நடந்த விசாரணைகளில் சர்ரே பகுதியைச் சேர்ந்த வேபிரிட்ஜ் என்ற இடத்தில் வசிக்கும் 63 வயது தமிழர் துரைசாமி பத்மநாபன் மற்றும் ஹரோ பகுதியைச் சேர்ந்த 38 வயதான மயூரன் குகதாசன் ஆகிய இருவரும் குற்ற வழிகளில் சொத்து சேர்ப்பதை தடை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று பிரிட்டிஷ் எல்லைப்புற நிறுவன அறிக்கை ஒன்று கூறுகிறது.

பின்னர் இந்த இருவரும் ரெய்கேட்ஸ் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, வரும் 12ம் தேதி வரை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எதிர்வரும் 12ம் தேதியன்று, அதே நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்காக இவர்கள் ஆஜராகவேண்டும்.

இதே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வேறு இருவர் மார்ச் முதல் தேதி வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.