சிரியா: அரச படையினரை கிளர்ச்சிக்காரர்கள் கொல்வதாகக் காட்டும் வீடியோ

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 நவம்பர், 2012 - 10:58 ஜிஎம்டி
வெளிவந்துள்ள வீடியோவிலிருந்து ஒரு காட்சி

வெளிவந்துள்ள வீடியோவிலிருந்து ஒரு காட்சி

சிரியாவின் வடக்கே அரச படையினரின் சோதனைச் சாவடி ஒன்றைத் தாக்கி அங்கிருந்தவர்களைப் பிடித்த கிளர்ச்சிக்காரர்கள், அரச படைச் சிப்பாய்கள் ஒரு டஜன் பேரை அதே இடத்தில் கேள்விக் கணக்கின்றி கொல்வதாகக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

கொதிப்படைந்து காணப்படும் துப்பாக்கிதாரிகள் 'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, தரையில் கிடந்த கைதிகளை உதைத்ப்பதும், பின்னர் இயந்திரத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க, சடலக் குவியல் ஒன்று காட்டப்படுவதுமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோ உண்மையா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அப்படி உண்மையாக இருந்தால் போர்க்குற்றம் ஒன்றின் ஆதாரமாக இது அமையும் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு கடும்போக்கு இஸ்லாமியவாதக் குழு இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக குற்றஞ்சாட்டபப்டுகிறது.

தலைநகர் டமாஸ்கஸையும் வடபகுதி நகரம் அலெப்போவையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி ஒன்றை கிளர்ச்சிப் படைகள் பிடித்துவிட்டார்கள் என்று தகவல்கள் வெளியான பின்னர் இந்த வீடியோ வெளிவந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.