BBC navigation

2000: ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2012 - 10:13 ஜிஎம்டி
ஆப்கானில் உள்ள அமெரிக்கச் சிப்பாய்கள் சிலர்

ஆப்கானில் உள்ள அமெரிக்கச் சிப்பாய்கள் சிலர்

ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவருகின்ற மோதலில் அங்கு கொல்லப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டிவிட்டது என்பதை அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.

வார்தாக் மாகாணத்தில் ஆப்கானிய பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதலில் அமெரிக்கச் சிப்பாய் ஒருவரும், சிவிலியன் ஒப்பந்தக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஆப்கானியப் சிப்பாய்கள் பலரும் இதில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

2012ஆம் ஆண்டில் மட்டுமே ஆப்கானிய பாதுகாப்பு பிரிவினர்கள் நடத்திய தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமான வெளிநாட்டுச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிய பாதுகாப்பு பிரிவினராலேயே தொடர்ந்து ஆபத்துகள் வந்ததை அடுத்து அவர்களோடு சேர்ந்து ரோந்துப் பணி செய்வதை நேட்டோ தலைமையிலான படைகள் குறைத்திருந்தன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.