bbc.co.uk navigation

பாகிஸ்தானில் ஆளில்லா விமான குண்டுவீச்சில் 6 பேர் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஆகஸ்ட், 2012 - 10:39 ஜிஎம்டி
அமெரிக்காவின் ஆளில்லா விமானம்

பாகிஸ்தானில் ஆப்கானுடனான எல்லையை ஒட்டியிருக்கின்ற பழங்குடியினப் பகுதியான வடக்கு வாசிரிஸ்தானில் அமெரிக்கர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாகக் கருதப்படும் இடங்களில் இரண்டு ஏவுகணைகளை வீசியிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பகுதியளவில் சுயாட்சி அதிகாரம் பெற்ற இப்பிராந்தியத்தில் முஸ்லிம் மக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

தற்கொலை தாக்குதல்

இதனிடையே நாட்டின் தென்மேற்கிலுள்ள குவெட்டா நகரில் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் கார் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிசார் கூறுகின்றனர்.

தாக்குதலாளி வந்த கார் சோதனைச் சாவடி ஒன்றில் நிறுத்தப்பட்டபோது அவர் குண்டை வெடிக்கச் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலுசிஸ்தான் பிராந்தியத்தின் தலைநகரமான குவெட்டாவில் ஷியா சிறுபான்மையினரை இலக்குவைத்து வன்முறைகள் நடந்துவருகின்றன. பிரிவினைவாதக் கிளர்ச்சியும் இப்பிராந்தியத்தில் மேலோங்கிவருகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.