bbc.co.uk navigation

பாகிஸ்தான் விமானப்படைத் தளத்தில் ஆயுததாரிகள் தாக்குதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட், 2012 - 10:25 ஜிஎம்டி
கம்ரா விமானப்படைத் தளத்தில் ஒரு விமானம்

கம்ரா விமானப்படைத் தளத்தில் ஒரு விமானம்

பாகிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளம் ஒன்றை ஆயுததாரிகள் தாக்கியுள்ளனர்.

தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள கம்ரா விமானப்படைத் தளத்தினுள் பொழுது புலரும் முன்பாக இராணுவச் சீருடை அணிந்து மாறுவேடத்தில் நுழைந்த தீவிரவாதிகள், இயந்திரத் துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக பாகிஸ்தானிய தாலிபான் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை அடுத்து நடந்த நெடுநேர துப்பாக்கி சண்டையில் ஆயுததாரிகள் எட்டு பேரும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விமானப்படைத் தளத்தில் குறைந்தது முப்பது போர் விமானங்கள் இருந்தன. இவற்றில் ஒரு விமானம் மட்டுமே தாக்குதலில் சேதமடைந்தது.

பாகிஸ்தானின் இராணுவ தளங்களை இலக்குவைத்து தாலிபான் அமைப்பினர் அண்மைய சில ஆண்டுகளாகவே வரிசையாக தாக்குதல்களை நடத்திவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.