
ஜூலியன் அசாஞ்
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எக்வடார் அடைக்கலம் கொடுத்திருந்தாலும் என்பது அவரது எதிர்காலம் குறித்த பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
1961 ஜெனீவா ஒப்பந்தத்தின்கீழ் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குள் ஒரு நாட்டின் பொலிசார் தூதரின் அனுமதியில்லாமல் நுழைய முடியாது.
ஆனால் தூதரகங்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடிய சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உண்டு.
அச்சட்டத்தைப் பயன்படுத்தி அசாஞ்சை கைதுசெய்ய பிரிட்டன் சட்ட ரீதியில் வழி தேடலாம.
ஆனாலும் அரசியல் ரீதியில் அப்படி செய்வதை தவிர்க்கவே பிரிட்டன் விரும்பும் என்று கூறலாம்.
ஏனென்றால் தஞ்சம் கோரியவரை தூதரகத்துக்குள் நுழைந்து பிடிப்பதென்பது மற்ற நாடுகளுக்கு மோசமான ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று கருதப்படுகிறது.







