
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பெய்த ஒரு வார கால பலத்த மழையினால் அந்த நகரின் 60 சதவீதப் பகுதி நீரில் மூழ்கியிருக்கிறது.
இந்த நகரின் சாலைகளும், சில பகுதிகளும் நதிகளைப் போல காட்சியளிக்கும் நிலையில், இந்த நகரை ஒரு தண்ணீர் உலகம் என்று நாட்டின் பேரிடர் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் வர்ணித்தார்.
நகர வாசிகள் கழுத்தளவு நீரில் நிற்பதைத் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
வெள்ளத்தில் வீடுகளில் சிக்கியிருக்கும் நகரவாசிகளை அணுக இராணுவத்தினரும், போலிசாரும் , தன்னார்வப் பணியாளர்களும், ரப்பர் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனல் சிலர் தங்கள் வீடுகளில் உடமைகள் கொள்ளையடிக்கப்படக்கூடும் என்றஞ்சி, வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.
பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. குறைந்தது 16 பேர் இறந்திருக்கிறார்கள்.








