bbc.co.uk navigation

சிரியாவில் கடத்தப்பட்ட இரானியர்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஆகஸ்ட், 2012 - 11:43 ஜிஎம்டி

சிரியாவில் சனிக்கிழமையன்று இரானியர்களின் குழு ஒன்று கடத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கடத்தப்பட்டதைக் காண்பிக்கும் வீடியோ படக்காட்சியை துபாயை தளமாகக் கொண்டு செயற்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒளிபரப்பியுள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள வழிபாட்டிடம் ஒன்றுக்கு சென்ற யாத்திரிகர்களே இவர்கள் என்று இரான் கூறுகிறது.

ஆனால், இந்த தொலைகாட்சி படத்தில் வருகின்ற ஒரு கடத்தல்காரர், கடத்தப்பட்ட 48 பேரும் இரானிய புரட்சிகர இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்.

கடத்தப்பட்ட இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களில் சிலர் என்று நம்பப்படுபவர்கள், சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களால் பயன்படுத்தப்படும் சிரியாவின் பழைய கொடியின் முன்பாக அமர்ந்திருப்பதையும் அந்த வீடியோ காண்பித்தது.

சிரிய விவகாரம் குறித்து துருக்கியுடன் முறண்பாட்டுடனான உறவைக் கொண்டிருக்கின்ற போதிலும், இரான் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க உதவுமாறு துருக்கியையும், கட்டாரையும் கேட்டிருக்கிறது.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.