bbc.co.uk navigation

சிரியாவில் விசாரணயின்றி பலர் கொல்லப்பட்டுள்ளனர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஆகஸ்ட், 2012 - 10:23 ஜிஎம்டி

கிளர்ச்சிப் படைகளால் பிடிக்கப்பட்டுள்ள அரச ஆதரவாளர்கள்

சிரியாவில் அரச படைகளும், ஆயுதக் குழுக்களும் 70 பேருக்கும் அதிகமானவர்களை, தலைநகர் டமாஸ்கஸில் இவ்விதமான விசாரணைகளும் இல்லாமல் கொலை செய்துள்ளதாக எதிர்கட்சி செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே சிரியாவின் தலைநகரிலும், நாட்டின் மிகப்பெரிய நகரான அலெப்போவிலும் பெரும் சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அலெப்போவில், கிளர்ச்சிப் படையினர், அங்குள்ள முக்கிய இராணுவ விமானதளத்தின் மீது ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

"அலெப்போவில் அராஜகம்"

இதே வேளை, அலெப்போவில சிறைபிடிக்கப்பட்டுள்ள, அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுவின் பல உறுப்பினர்களை, கிளர்ச்சிப் படையினர் கொலை செய்துள்ளதை, சிரியாவில் அரசுக்கு எதிரான தேசிய கவுன்சில் குறைகூறியுள்ளது.

அவ்வாறு கிளர்ச்சிப் படையினர், அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுவினரை கொலை செய்யும் போது எடுக்கப்பட்ட ஒரு கானொளியை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அங்கு அராஜகம் இடம்பெற்றுள்ளதற்கான ஒரு சான்று என, அரச எதிர்ப்பு அமைப்பான சிரிய தேசிய கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.